வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
நடிகை குஷ்பு டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்தில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறவர். அவரிடம் ரசிகர்கள் டுவிட்டரில் கேட்ட கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு...
* அம்மா, அக்கா, குணச்சித்திர நடிகை என எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
கண்டிப்பாக இல்லை.
* அஜித் , விஜய்யை வைத்து படம் தயாரிப்பு மற்றும் இயக்கும் எண்ணம் உள்ளதா?
இப்போதைக்கு இல்லை.
* பொதுவாக ஒரு முடிவை எப்படி எடுப்பீர்கள்? இதுவரை நீங்கள் எடுத்த முடிவில் கடினமானது எது?
மனதுக்கு நன்மை என பட்டால் அந்த முடிவை எடுப்பேன். கடினமான முடிவு இனிமேல் தான் எடுக்க வேண்டும்.
* நீங்கள் ஓரின சேர்க்கையாளருக்கும், ஆதரவு தெரிவிப்பீர்களா?
ஒவ்வொரு மனிதனுக்கும் தனது விருப்பப்படி வாழும் உரிமை இருக்கிறது.
* இதயப்பூர்வமான மூன்று விஷயங்கள்?
நண்பர்கள், எனது குடும்பம், மற்றும் என் சுயமரியாதை.
* நீங்கள் நடிக்க விரும்பிய மற்றும் வாய்ப்பு தவறிப் போன படம் எது?
தெலுங்கு சின்னத்தம்பி (சண்டி)
* சுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?
உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம்.
* இந்தியாவிலேயே ஸ்டைலான நடிகர் என்றால் யாரை சொல்வீர்கள்?
ஹிருத்திக் ரோஷன்.
* இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என யாரை சொல்வீர்கள்?
தமிழில் கமல், இந்தியில் அமீர்கான்
* உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
ஏழு மொழிகள் பேசத் தெரியும் , அதில் நான்கு மொழிகள் எழுதவும் தெரியும்
* உங்கள் குழந்தைகளும் சினிமாவிற்கு வந்தால் ஓகே சொல்வீர்களா?
முதலில் அவர்கள் படிப்பை முடிக்க வேண்டும்.
* யார் முதலில் காதலை சொன்னது நீங்களா ? இல்லை சுந்தர்.சி யா?
அவர்தான் .1995 பிப்ரவரி 22ம் தேதி.
* அரசியலில் எப்போது பெரிய ஆளாக வருவீர்கள்?
ஐடியா இல்லை..
* உங்கள் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்து?
வெற்றி பெற குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.