பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களில் முக்கியமானவர் சந்தோஷி. தற்போது இளவரசி சீரியலில் நடித்து வருகிறார். சந்தோஷி சினிமா நடிகையாக வாழ்க்கையை துவக்கியவர். சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் என்பது பற்றி சந்தோஷி இப்படிக் கூறுகிறார்.
பாபா படத்தில் மனீஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்தேன். அதன் பிறகு ஜெய் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானேன். தொடர்ச்சியாக மூன்று தெலுங்கு படங்களில் நடித்தேன். ஹனிமூன் எக்ஸ்பிரஸ் என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்தேன். அகத்தியன் சார் இயக்கிய காதல் சாம்ராஜ்யம் படத்தில் ஹீரோயினாக நடித்தேன். அந்தப் படம் வெளிவரவில்லை. இதனால் சினிமாவில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் போனது.
அதன் பிறகு வந்தது எல்லாமே கிளாமரான கேரக்டர்கள்தான். அப்படி நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை அதனால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு சீரியலுக்கு வந்து விட்டேன். இருந்தாலும் நல்ல கேரக்டர்கள் கிடைக்கும்போது நடிக்க தயக்கமில்லை. தமிழில் வந்த சம்திங் சம்திங் படத்தின் தெலுங்கு பதிப்பில் நான் த்ரிஷாவின் தோழியாக நடித்தேன். அந்தப் படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகைக்காக நந்தி விருது வாங்கினேன். இது போன்ற வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன். மற்றபடி யாரையும் தேடிப்போய் வாய்ப்பு கேட்க மாட்டேன். என்கிறார் சந்தோஷி.