பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டின் மாஜி கனவு கன்னி, ரேகா நடித்து வரும் புதியபடம் ''சூப்பர் நானி''. இந்திரா குமார் இயக்கும் இப்படத்தில் சர்மான் ஜோஷி, அனுபம் கெர், ரன்தீர் கபூர் உள்ளிட்டடோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சூப்பர் நானி படத்தில் ரேகா பாட்டியாகவும், அவரது பேரனாக சர்மான் ஜோஷியும் நடிக்கின்றனர். இவர்களுக்கு இடையே உள்ள பாசம் தான் கதை. இதில் சோகம், அழுகை, மகிழ்ச்சி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இப்படம் உருவாகி உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் டிரைலர் இருதினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. டிரைலரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி தீபாவளி விருந்தாக அக்டோபர் 24ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. தீபாவளிக்கு ஷாரூக்கானின் ஹேப்பி நியூ இயர் படமும் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.