பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
படப்பிடிப்பின் போது தொடர்ந்து 3வது முறையாக வருண் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்பாராத பாதிப்புக்களால் அவருக்கு காயம் ஏற்படுகிறதா அல்லது சில தவறான செயல்பாடுகளாலோ அல்லது வழிகாட்டுதலாலோ அவருக்கு காயம் ஏற்படுகிறதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.
வருண் தவான், ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் நடித்த போதும் காயம் ஏற்பட்டது. பின்னர் நடித்த மைன் தேரா ஹீரோ படத்தின் படப்பிடிப்பின் போதும் அவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது நடித்து வரும் ஏபிசிடி 2 படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட வருண், ஓய்வு எடுக்காமல் ஊசி மட்டும் போட்டுக் கொண்டு வந்து நடித்து கொடுத்தாராம். ஒரு வாரம் ஓய்வு எடுத்தால் சரியாகி விடும் என டாக்டர்கள் கூறி உள்ளனராம்.
ஏபிசிடி 2 படத்தில் வருண் தவான், பிரபு தேவா, கணேஷ் ஆச்சார்யா, ஸ்ரதா கபூர் ஆகியோர் நடிக்கிறார்கள். ரிமோ டிசவுசா தயாரிக்கும் இந்த படம் 2015ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.