Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானத்தின் காமெடிக்கு மீண்டும் கைதட்டல்!

21 செப், 2014 - 13:46 IST
எழுத்தின் அளவு:

சந்தானத்தின் காமெடி அலை ஓய்ந்து விட்டது. அவரது இடத்தை சூரி பிடித்து விட்டார் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் கலர் கலராக ரீல் ஓடிக்கொண்டிருககிறது. குறிப்பாக, சந்தானத்திற்கு ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை பயன்படுத்தி சூரியின் அபிமானிகள் இதுபோன்ற செய்திகளை பரப்பி விட்டு வருகிறார்களாம்.

ஆனால், பட்டையக் கிளப்பனும் பாண்டியா படத்தில் சூரி விதார்த்தை ஓவர்டேக் செய்து நடித்திருந்தபோதும் அந்த படம் தோல்வியடைந்து விட்ட இந்த நேரத்தில், சந்தானம் காமெடி பட்டையக் கிளப்பியுள்ள அரண்மனை படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. கதைப்படி ராஜாவின் இரண்டாவது மனைவியின் பேரனாக சொத்தில் பங்கு கேட்பது போன்று அரண்மனைக்குள் செல்லும் சந்தானம், அங்கு சமையல்காரனாக்கப்பட்ட படம் முழுக்க தனது ப்ராண்ட் காமெடிகளை அள்ளி தெளித்திருக்கிறார்.


கூடவே, காமெடிக்கு பேர் போனவரான டைரக்டர் சுந்தர்.சியின் கதையும், காட்சிகளும் சந்தானத்துக்கு கைகொடுத்திருப்பதால் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். இதனால் சந்தானம் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளிலுமே தியேட்டர்களில் கைதட்டல் காதை பிளக்கிறதாம். இதனால் இதே கைதட்டல் அடுத்தபடியாக நான் நடித்துள்ள லிங்கா உள்ளிட்ட மற்ற படங்களிலும் கேட்கும் என்று மீண்டும் காலரை தூக்கி விட்டுள்ள சந்தானம், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தையடுத்து சேதுவுடன் இணைந்து தான் நடித்துள்ள வாலிபராஜா மற்றும் நம்பியார், வாலு, நண்பேன்டா ஆகிய படங்கள் வந்தால் மீண்டும் தனது மார்க்கெட் எகிறும் என்று கூறி வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in