துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படம் ஹிட்டாக அமைந்தது. அந்த படத்தில் நடிக்க முதலில் பல நடிகைகளை பரிசீலனை செய்து வந்தபோது, லட்சுமிமேனன் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்று வந்ததால், ராசியான நடிகையாக இருககிறார் என்று அவரை கமிட் பண்ணினார் விஷால்.
அவர் எதிர்பார்த்தது போலவே பாண்டியநாடு மெகா ஹிட்டாக அமைந்தது. அதனால் அதற்கடுத்து திரு இயக்கத்தில் தான் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்திற்கும் லட்சுமிமேனனையே ஒப்பந்தம் செய்த விஷால், அவரை முத்தக்காட்சியிலும் நடிக்க வைத்து படத்திற்கும், லட்சுமிமேனனுக்கும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
ஆனால், அதன்பிறகு பூஜை படத்தில் ஸ்ருதிஹாசன், ஆம்பள படத்தில் ஹன்சிகாவுடன் நடித்து வரும் விஷால், இந்த படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கு ஸ்ருதிஹாசனைதான் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருந்தாராம். ஆனால், அந்த படமும் பாண்டியநாடு படத்தைப்போலவே மதுரை மண்வாசனைக் கதையில் உருவாகயிருப்பதால், ஸ்ருதிஹாசனை விட லட்சுமிமேனன்தான் அந்த கதைக்கு கச்சிதமாக பொருந்துவார் என்று தனது கருத்தை சுசீந்திரனிடம் முன்வைத்து, அவரை புக் பண்ணிவிட்டாராம் விஷால்.