‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தற்போது விஷால், ஹரி இயக்கும் பூஜை மற்றும் சுந்தர்.சி இயக்கும் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். பூஜையில் ஸ்ருதி ஹாசன் ஜோடி, ஆம்பளயில் ஹன்சிகா மோத்வானி ஜோடி. இதற்கு பிறகான அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். மதுரை கதை. ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ருதி ஹாசனுக்கு பதில் லட்சுமிமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுபற்றி விஷாலிடம் கேட்டபோது "முதலில் ஸ்ருதிதான் சுசீந்திரன் சார் படத்திற்கு பரிசீலிக்கப்பட்டார். ஆனால் கதை மதுரை கதை என்பால் அதற்கு கொஞ்சம் நேட்டிவிட்டியான முகம் தேவை என்று இயக்குனர் சொன்னார். மேலும் இந்த படத்தில் ஹீரோயினுக்கான ஸ்கோப் குறைவு. அதனால் ஸ்ருதிக்கு பதிலாக லட்சுமி மேனனை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறோம். லட்சுமி மேனனுக்கு இது வித்தியாசமான கேரக்டராக இருக்கும்" என்றார்.
ஏற்கெனவே விஷால் லட்சுமிமேனனுடன் நடித்த பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் வெற்றி பெற்றதால் அந்த செண்டிமெண்டால் இந்தப் படத்திற்கும் லட்சுமி மேனனை முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள்.