Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரண்மனை பார்ட் 2வுக்கு அடிபோட்ட சுந்தர் சி.

20 செப், 2014 - 13:52 IST
எழுத்தின் அளவு:

வினய், சந்தானம், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, கோவை சரளா, மனோபாலா, சரவணன், சந்தானபாரதி என மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்து அரண்மனை படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி.

அது மட்டுமல்ல, முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.


அவருக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார்.


அரண்மனை படம் நேற்று வெளியாகி உள்ளது.


காமெடி படங்களை இயக்குவதில் வல்லவரான சுந்தர்.சி.க்கு பேய்ப்படம் இயக்கத் தெரியுமா என்ற கேள்வியுடன் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போனவர்கள் பரம திருப்தியுடன் வெளியே வருகிறார்கள்.


பேய்ப்படத்தில் இவ்வளவு காமெடியை புகுத்த முடியுமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு கலகலப்பான காமெடிப்படமாக பேய்ப்படத்தை எடுத்திருக்கிறார்.


அரண்மனை படத்தில் பேயாக நடித்திருப்பவர் ஹன்சிகா.


க்ளைமாக்ஸில் ஹன்சிகாவின் ஆவி வானுலகம் சென்றுவிடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.


ஆனாலும் கடைசி ஷாட்டில் அந்த அரண்மனைக்குள் ஒரு ஆவி இருப்பதுபோல் காட்டி படத்தை முடித்திருக்கிறார் சுந்தர்.சி.


ஆக...அரண்மனை பார்ட் 2 எடுக்கும் திட்டத்திலேயே இப்படி செய்திருக்கிறாரா?


சுந்தர்.சியிடம் கேட்டபோது,அரண்மனை படம் மிகப்பெரிய ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால்தான் அப்படி ஒரு ஷாட்டைப்போட்டு பார்ட் 2 எடுப்பதற்கான லீடை வைத்தேன். விஷால் படத்தை முடித்த பிறகு அரண்மனை பார்ட் 2 எடுப்பேன் என்று கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in