இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
தமன்னா, ஸ்ருதிஹாசன் இருவருக்குமிடையே படங்களை கைப்பற்றுவது சம்பந்தமாக பலத்த போட்டி நிலவி வருவதாக முன்பு செய்திகள் வெளியானபோது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மறுப்பு சொன்னார் ஸ்ருதிஹாசன். அதோடு, தமன்னா எனது க்ளோஸ் ப்ரண்ட் என்று தெலுங்கு சினிமா விழாக்களில் தான் அவருடன் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களையும் தனது டுவிட்டரில் வெளியிட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், இப்போது நிஜமாலுமே தமன்னாவுக்கும், ஸ்ருதிக்குமிடையே தொழில்முறை போட்டி நடப்பதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, தற்போது தமிழில் பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், இந்தியில் வெல்கம் பேக், கப்பார் படங்களை முடித்து விட்டு யாரா, ராக்கி ஹாண்சம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் நடித்த ரேஸ்குர்ரம் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவுடன் ஆகடு படத்தில் நாயகியாக நடித்து விட திட்டமிட்டிருந்தார். அந்த வாய்ப்பைத்தான் லாவகமாக தட்டிப்பறித்து விட்டாராம் தமன்னா. அதிலிருந்துதான் தமன்னா-ஸ்ருதிஹாசனின் நட்பில் விரிசல் விழுந்து விட்டதாம்.
அதனால், இப்போது ஏதாவது விழாக்களில் இருவரும் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தாலும் முன்பு மாதிரி கட்டித்தழுவியெல்லாம் நட்பு வளர்ப்பதில்லையாம். முடிந்தவரை அவரை கண்டுகொள்ளாதது போலவே முகத்தை திருப்பிக்கொண்டு கடந்து சென்று விடுகிறாராம் ஸ்ருதிஹாசன்.