அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் |
மிகவும் அரிதாகவே சந்தித்து கொண்டாலும் இலியானாவை கரீனா கபூருக்கும், கரீனாவிற்கு இலியானாவையும் மிகவும் பிடிக்குமாம். சமீபத்தில் தான் இவர்கள் இருவரிடையே புதிய நட்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாம். அதற்கு காரணம் கரீனாவின் கணவரும் நடிகருமான சைப் அலிகான் தானாம்.
ஹேப்பி எண்டிங் படத்தில் சைப்புடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் இலியானா. அப்போது ஷீட்டிங் ஸ்பாட்டில் கரீனா பற்றிய நிறைய விஷயங்களை சைப் அலிகானிடம் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டாராம் இலியானா. இது பற்றி அவர் கூறுகையில், என்னை மிகவும் கவர்ந்தவர் கரீனா. முதலில் கரீனாவை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால், ஒரு நல்ல பிரண்டு என்பதை அவரை முதன் முதலாக சந்தித்த போது தான் தெரிந்து கொண்டேன்.
அவர் ரொம்பவே ரிசர்வ்டு டைப்பாக இருந்தாலும் எளிமையாக பழகக் கூடியவர். அதனால் இருவரும் பார்த்த உடனேயே பேசி விட்டோம். உணவு மூலம் எங்களின் அன்பை பரிமாறிக் கொண்டோம். இப்போது சைப்பால் நல்ல பிரண்ட்ஸ் ஆகி விட்டோம் என்றார்.
மேலும் சைப் அலிகான்-கரீனா தம்பதியை தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறும் இலியானா, அவர்கள் வீட்டில் இருந்தது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்ததாகவும் கூறுகிறார்.