பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மானாட மயிலாட, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் கோகுல். நடன இயக்குனர் கலா மாஸ்டரின் செல்லக்குழந்தை. உலகம் முழுவதும் சென்று நிகழ்ச்சிகள் நடத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து ஹிட்டான அம்புலி 3டி படத்தில் நடித்தார். அதன் பிறகு பெரிய சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது அம்புலி தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் ஆ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர ஜம்போ 3டி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சின்னத்திரையிலிருந்து சென்று ஜெயித்த சந்தானம், சிவகார்த்திகேயன் மாதிரி நானும் ஜெயிப்பேன் என்கிறார் கோகுல்.
அவர் கூறியிருப்பதாவது: எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீசுக்கு நன்றி. என்னுடைய பலமே என்னோட நம்பிக்கைதான். நான் இந்த அளவுக்கு வளர காரணமாக இருந்தவர் கலா மாஸ்டர். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்ற மற்ற நட்சத்திரங்கள் போலவே நானும் மின்னுவேன். தற்போது நடித்து வரும் ஆ படம் எனக்கு நல்ல திருப்பத்தை தரும். ஜம்போ 3டி படம் 90 சதவிகிதம் ஜப்பானில் படமாக உள்ளது. அதனால் அடுத்த மாதம் ஜப்பான் செல்கிறேன். என்கிறார் கோகுல்.