ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கவர்ச்சியாலும், துள்ளல் நடிப்பாலும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் சித்ரங்கடா. தனது நடிப்பின் ஸ்டிலை மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளார். நடிப்பில் தனக்குள்ள பிரச்னைகளை பகிர்ந்து கொண்டு, சரியான அறிவுரை பெற நினைத்த சித்ரங்கடா, சென்றது வேறு இடமும் அல்ல சல்மான் கானிடம் தான்.
சமீபத்தில் சல்மான் கானின் வீட்டிற்கு சென்ற சித்ரங்கடா, அவருடன் சுமார் இரண்டு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தினாராம். சினிமா துறை பற்றி சல்மானிடம் தீவிர ஆலோசனை செய்த அவர், தற்போது தான் நிறைய படங்கள் நடிக்க விரும்புவதாக சல்மானிடம் தெரிவித்தாராம். அதனால் அதற்காக கதையை தேர்வு செய்வது தொடர்பாக தனது நலம் விரும்பிகள் பலரிடமும் அட்வைஸ் கேட்டுள்ளாராம் சித்ரங்கடா.
இந்த சந்திப்பின் போது சித்ரங்கடாவிற்கு சல்மான் கான் நிறைய டிப்ஸ் வழங்கினாராம். அது சித்ரங்கடாவிற்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்ததாம். சித்ரங்கடா, தற்போது ஷோகில் கானின் ஸ்போர்ட்ஸ் டீம் தூதராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.