ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன். அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தவருக்கு ஜிகர்தண்டாவிற்கு பிறகு புதிதாக படங்களேதும் கமிட்டாகவில்லை. அதற்கு முன்பே அவர் நடித்து வந்த சிப்பாய், கமிட்டாகியிருந்த கொம்பன் படங்கள் மட்டுமே தற்போது அவரது கைவசம் உள்ளன. மேலும், மலையாளத்தில் திலீப்புடன் நடித்த அவதாரம் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றபோதும், லட்சுமிமேனனின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளதாம். அதனால் இப்போது தமிழை விட தனது தாய்மொழியான மலையாளத்தைதான் அதிகமாக நம்பிக்கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில, லட்சுமிமேனனை அறிமுகம் செய்த பிரபுசாலமனே தற்போது கயல் படத்தில் ஆனந்தியை அறிமுகம் செய்திருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. மேலும், அதன்பிறகு ஆனந்தி கமிட்டான பொறியாளன் படம் ஏற்கனவே வெளியாகி விட்டபோதும், பிரபுசாலமன் படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாக இருக்கும் என்று சில டைரக்டர்கள் நினைக்கிறார்கள்.
அதனால், கயல் வெளியான பிறகு அவரது நடிப்பும் லட்சுமிமேனன் ரேஞ்சுக்கு இருந்தால் உடனடியாக தங்கள் படங்களுக்கும் ஆனந்தியை கமிட் பண்ணி விட வேண்டும் என்று சில இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், தற்போது ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் களவாணி பட சற்குணம் இயக்கும் படம் என சில படங்களில் நடித்து வருகிறார் ஆனந்தி. ஆக, பிரபுசாலமனின் கயல் படத்தில் ஆனந்தி சிறப்பாக நடித்திருக்கும் பட்சத்தில் லட்சுமிமேனனுக்கான வாய்ப்புகள் அவரை முற்றுகையிடும் அறிகுறிகள் இப்போதே தென்படுகிறது.