ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தான் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதில் ஒரு தொகையை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் ஏழை எளிய மாணவ மாணவிகளின் படிப்பு செலவு மற்றும் ஏழை பெண்களின் திருமண உதவி உள்பட பல நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வருபவர் விஜய்.
அந்த வகையில், தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்காக சமீபத்தில் ரூ. 25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளாராம் விஜய். ஆனால், அவரிடத்தில் நிதி உதவியை யாருமே கேட்கவில்லையாம். உதவி இயக்குனர்களின் சம்பளப்பிரச்சினை உள்பட மேலும் சில பிரச்சினைகளுக்கிடையே இயக்குனர் சங்கம் செயல்பட்டு வருவதை அறிந்த விஜய், இந்த உதவியை தானே முன்வந்து செய்துள்ளாராம்.
இதுபற்றி விஜய்தரப்பில் இருந்து எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், இயக்குனர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள சில இயக்குனர்கள் தற்போது விஜய் செய்த இந்த உதவி பற்றி வெளியில் கூறியுள்ளனர்.