மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
தாங்கள் இணைந்து நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால், இனி சேர்ந்து சேர்ந்து நடிக்க போவதில்லை என முடிவு செய்திருக்கிறதாம் ஷாகித் கபூர்-கரீனா ஜோடி. இது பற்றி ஷாகிப் கபூர் கூறுகையில், நாங்கள் இருவரும் இணைந்து 3 படங்களில் நடத்திருக்கிறோம். ஆனால் மக்கள் எங்களின் ஜோடியை விரும்பவில்லை. அதனால் தான் அந்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளன. இருந்தும், அந்த கருத்தை முறியடிக்க முயற்சித்தோம். அதனால் தான் ஜாப் வி மெட் என்ற படத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்தோம் என தெரிவித்தார்.
ஜாப் வி மெட் படத்தில் இந்த ஜோடியை பார்த்து விட்டு நல்ல ஜோடி என பாராட்டுவார்கள், படம் பெரிய ஹிட் ஆகும் என பெருத்த நம்பிக்கையோடு இருந்தாராம் ஷாகித் கபூர். ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாமல் சுமாராகவே ஓடியதாம். இதனால் மீண்டும் ரிஷ்க் எடுக்க வேண்டாம் என கருதிய இந்த ஜோடி, மக்கள் விரும்பாததால் இனி தாங்கள் சேர்ந்து நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாம்.