டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள 'ஐ' படத்தின் டீசர் மற்றும் ஆடியோ இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்தின் பாடல்களும் டீசரும் தமிழ்த் திரையுலகத்தை மட்டுமல்ல, இந்தியத் திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படத்தில் உள்ள பிரம்மாண்டத்தையும், விஷூவல் எஃபெக்ட்ஸ், மேக்கப் இன்னும் பிற விஷயங்களை உள்ளடக்கிய ஒரு நிமிடத்திற்கும் குறைவாக வெளியிடப்பட்ட டீசரே பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
இதுவரை வந்த ஷங்கர் படங்களை விட இந்தப் படத்தின் பிரம்மாண்டமும், தொழில்நுட்ப விஷயங்களும் நமது தமிழ் சினிமாவின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக எண்ணற்ற ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் திரையுலகத்தைச் சேர்ந்த பல இயக்குனர்களும் டீஸரைப் பற்றிப் பாராட்டி வருகிறார்கள். அவர்களில் குறிப்பிட வேண்டியவர் 'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 'நான் ஈ' படத்தில் அவருடைய கிராபிக்ஸ், பிரம்மாண்டம் தமிழ் ரசிகர்களையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. தற்போது 'பாகுபலி' என்ற பிரம்மாண்ட சரித்திரப் படத்தை இயக்கி வருகிறார். தென்னிந்தியாவில் ஷங்கருக்கு அடுத்து பிரம்மாண்டத்தில் அசத்தும் இயக்குனர் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது.
'ஐ' டீசரைப் பற்றி அவர் கூறியிருப்பதாவது, “ஷங்கர் ஸார்......ஐ டீசர்...பிரமிக்க வைக்கிறது, அவரின் பிரம்மாண்டத்திற்கும், காட்சியமைப்பிற்கும், ஒருவரும் பக்கத்தில் கூட நெருங்க முடியாது,” என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.