அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
பாலிவுட்டின் மாஜி கனவு கன்னி ரேகா, தற்போது இந்திரா குமார் மற்றும் அசோக் தக்ரியா இயக்கி வரும் சூப்பர் நானி படத்தில் வருகிறார். இப்படத்தின் முதல்போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் ரேகாவின் ஸ்டில், நர்கீஸ் தத்தின் புகழ்பெற்ற படமான ‛‛மதர் இந்தியா''வை நினைவுப்படுத்துகிறது. 1957-ம் ஆண்டு வெளியான இந்த மதர் இந்தியா படத்தில் நர்கீஸ் தத், கையில் கலப்பையுடன் இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியானது, இப்போது சூப்பர் நானியில் ரேகா, கையில் துடப்பத்துடன் நிற்பது போன்று படங்கள் வெளியாகியுள்ளன. மதர் இந்தியாவின் சில காட்சிகளை அப்படியே சூப்பர் நானியில் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் இந்திரா குமார்.