Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எனக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது - அர்ஜூன் கபூர் பேட்டி!!

16 செப், 2014 - 22:58 IST
எழுத்தின் அளவு:

எனக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது, எனக்கு நானே போட்டியாளன் என்று கூறுகிறார் பாலிவுட்டின் இளம் மற்றும் அழகிய நடிகரான அர்ஜூன் கபூர். சமீபத்தில் தனது ஃபைண்டிங் ஃபேனி படத்தின் புரொமோஷன் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜூன், பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார், அவர் கூறியதாவது...

எனது கேரக்டர் மூலம் எனது பிம்பத்தை ரசிகர்கள் அறிவர்

ஃபைண்டிங் ஃபேனி படத்தில், சேவியோ என்ற கேரக்டரில் நான் நடித்துள்ளேன். படம் பார்ப்பவர்களுக்கு, எனது கேரக்டர் வில்லன் போன்று தோன்றும், ஆனால் நான் வில்லன் கிடையாது. தனது தோல்விகளை எண்ணி அவன் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் அப்படி நடந்து கொள்கிறான். தன்னுடைய குணாதியங்களை மாற்ற தெரியாதவன், ஆனாலும் மனிதாபிமானம் உடையவன். எனது எல்லா படங்களிலும் நான் எனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன், அதேப்போல் பைண்டிங் பேனியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறேன். எனது ஒவ்வொரு கேரக்டரிலும் ரசிகர்கள் எனது பிம்பத்தை அறிந்து கொள்கின்றனர், ஆனால் எனது கேரக்டர் இதுபோன்றது என்று அவர்களால் அறிய முடியாது.

படப்பிடிப்பின் போது பயந்தேன்


பைண்டிங் பேனி படம் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டது. இதில் இந்தியில் படமாக்கப்பட்டபோது வசனம் உள்ளிட்ட அனைத்து காட்சிகளிலும் ஈஸியாக நடித்துவிட்டேன், ஆனால் ஆங்கிலத்தில் படமாக்கும்போது வசனங்களை பேச பயந்தேன். ஆனால் எனது இயக்குநர், டயலாக்கை எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து, சில டிப்ஸ்களையும் வழங்கினார், அவரது அறிவுறுத்தலின் பேரில் டயலாக்கை பேசி சிறப்பாக நடித்தேன்.

மூத்த நடிகர்களுடன் நடித்தது மறக்கமுடியாதது

பைண்டிங் பேனி படத்தில் பங்கஜ் சார், நஸ்ருதீன் சார், டிம்பிள் மேடம், தீபிகா மற்றும் நான் என மொத்தமே ஐந்து கேரக்டர்கள் தான். இதில் நானும், தீபிகாவும் இளைஞர்கள் மற்றும் புதியவர்கள், ஆனால் மற்ற மூவரும் எங்களை விட மூத்த நடிகர்கள். இந்தப்படம் துவங்குவதற்கு முன்பாக இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது, உங்களுடன் மூன்று மூத்த நடிகர்களும் நடிக்கிறார்கள் என்று சொன்னபோது அவர்களுடன் நான் நடிக்க மிகுந்த ஆவலாய் இருந்தேன். மூத்த நடிகர்களுடன் பணியாற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.

நான் யாருக்கும் காதல் கடிதம் எழுதியது கிடையாது

பேண்டிங் பேனி படத்தின் சிறிய சாரம்சமே காதல் கடிதம் தான். ஆனால் என் நிஜ வாழ்வில் நான் யாருக்கும் ஒரு காதல் கடிதம் கூட எழுதியது கிடையாது, அதற்கு முக்கிய காரணமே எனது கையெழுத்து மோசமாக இருக்கும். சில சமையங்களில் நான் எழுதியதை படிக்க எனக்கே சிரமமாக இருக்கும், பல நேரங்களில் செக் புக்கில் நான் போட்ட கையெழுத்து சரியாக இல்லை என்று செக் திரும்ப வந்துள்ளது. ஆனால் அதேநேரம் எனது அன்பிற்குரிய பெண்ணிற்கு இ-மெயில், மெசேஜ் போன்றவைகள் அனுப்பியுள்ளேன், ஆனால் காதல் கடிதம் அனுப்பியதில்லை.

நடிகராக அனில் கபூரை ரொம்ப பிடிக்கும்

நடிகர் அனில் கபூர் எனது மாமா தான், அதேசமயம் ஒரு நடிகராகவும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த ராம் லகான், மிஸ்டர் இந்தியா, இஷாவர், உள்ளிட்ட அவரது எல்லா படங்களையும் நான் பார்த்துள்ளேன், அதில் அவரது சினிமா கேரியரில் ராம் லகானும், மிஸ்டர் இந்தியாவும் தான் முக்கியமான படங்கள். அவர் எப்படி தனது படங்களில் ஒருவராக நடிக்கிறாரோ, அதேப்போல் நானும் அவரது பாலிசியை பின்பற்றுகிறேன்.

எனக்கும் யாரும் போட்டி கிடையாது

இன்றைய தேதியில் சினிமாவில் ஏகப்பட்ட புதுமுக நடிகர்கள், நடிகையர்கள் இருக்கின்றனர். இவர்களில் யாரும் எனக்கு போட்டியாளர்கள் கிடையாது. எனது எல்லா படங்களிலும், நான் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புதுமுக நடிகர்கள் உடனோ, அல்லது மூத்த நடிகர்களுடனோ எனக்கு போட்டி கிடையாது, எனக்கு நானே போட்டியாளன், பாலிவுட் சினிமாவில் நான் என்னை தக்க வைத்து கொள்ள எனது சினிமா கேரியரை மேலும் வளர்த்து கொள்ள கடுமையாக உழைக்கிறேன். இஷ்க்ஜாதே, அவுரங்கசெப், 2 ஸ்டேட்ஸ், பைண்டிங் பேனி உள்ளிட்ட படங்களில் எனது ரோலை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்

இவ்வாறு பேசினார் அர்ஜூன் கபூர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in