டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிக்பாஸ் புகழ் அர்மான் ஹோலி மற்றும் தனிஷா முகர்ஜி ஜோடி விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். சல்மான் கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-7-ல் நடித்தவர்கள் அர்மான் ஹோலி மற்றும் தனிஷா முகர்ஜி. இந்த நிகழ்ச்சியின்போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இருவரும் தனியாக சென்று வைஷ்ணவ தேவி கோயிலில் வழிபட்டனர். பிறகு துபாய், காஷ்மீர் போன்ற ஊர்களுக்கு எல்லாம் சென்று சுற்றி வந்தனர். ஆனால் அப்போது எல்லாம் தங்களது காதலை இருவரும் வெளிகாட்டவில்லை. இந்நிலையில், இவர்களது காதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து மிகா தனது வலைதளத்தில், நண்பர்களுக்கு ஓர் நற்செய்தி, அர்மான் ஹோலியும், தனிஷா முகர்ஜியும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். அவர்களுக்கு உங்களது வாழ்த்துக்களை சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.