பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
மலையாள சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நடிகை ஹென்னா பெல்லா. விடியும் வரை விண்மீன்களாவோம் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். பி.விஜய்குமார் என்ற புதுமுகம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடிக்கும் இந்தப் படத்தில் ஹென்னா கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
இன்னொரு நாயகியாக நேகா நடிக்கிறார். "சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் மோதிக் கொள்கிறார்கள். வெட்டிக் கொள்கிறார்கள் என்று அடிக்கடி பத்திரிகைகளில் செய்தி வரும். அந்த செய்தியின் பின்னணியை சொல்லுகிற படம். கல்லூரிக்குள் அரசியலையும், ஜாதியையும் கொண்டு சென்று ஒரு கூட்டம் தங்களை வளர்த்துக் கொண்டு வருகிறது. அவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகிற படம். இதில் நான் கல்லூரி மாணவர் தலைவனாக நடிக்கிறேன். நான் காதலிக்கும் பெண்ணாக நேகாவும் என்னை காதலிக்கும் மாணவியாக ஹென்னாவும் நடிக்கிறார்கள்" என்கிறார் இயக்குனர் விஜய்குமார்.