விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த பிறகு வெடி, சமர், பட்டத்து யானை என வரிசையாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த விஷாலுக்கு, சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த பாண்டியநாடு படத்தின் வெற்றி அவரை காலரை தூக்கி விட வைத்தது. அதையடுத்து நடித்த நான் சிகப்பு மனிதனும் ஓரளவு ஓடியது.
இந்த நிலையில், தன்னை வைத்து தாமிரபரணி படத்தை இயக்கிய ஹரி இயக்கத்தில் மீண்டும் பூஜை படத்தில் தற்போது நடித்து வரும் விஷால் அதிக நம்பிக்கையுடன் காணப்படுகிறார். ஏற்கனவே தனது ஒவ்வொரு படங்களிலும் அதிரடி ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹரி இந்த படத்தில் இன்னும் கூடுதல் ஆக்சனை புகுத்தியிருக்கிறாராம். படம் முழுக்க ஒரே அதிரடிதானாம்.
அதற்கேற்ப விஷாலும் வரிந்து கட்டி நடித்திருப்பதால் படத்தின் மீது அவர்களுக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், தீபாவளிக்கு ஷங்கரின் ஐ வருகிறது, விஜய்யன் கத்தி வருகிறது. கொஞ்சம் பாத்து சூதானமா நடந்துக்கோங்க என்று சிலர் விஷாலை உஷார் படத்தியபோதும், தீபாவளிக்கு பூஜையை வெளியிடப்போவது உறுதிதான். இது இப்ப எடுத்த முடிவல்ல, படத்தோடு பூஜை போடுறப்பவே எடுத்த முடிவு என்று தில்லாக பதில் சொல்லி வருகிறார் விஷால்.