ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏபிசிடி படத்தில் அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தி, பிரபலமானவர் லாரன் காட்லீப். இவர் தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பாகும் நடன நிகழ்ச்சியான, ஜலக் டிக்லா சீசன்-7-ல் பங்கேற்று ஆடி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக லாரனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. லாரனுக்கு கிட்னியில் கல் அடைப்பு உருவாகியுள்ளது, போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்பாக இன்னும் ஒரு சுற்று மட்டுமே பாக்கி உள்ளநிலையில், லாரனால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
இதுப்பற்றி லாரனிடம் தொடர்ந்து ஆட போகிறீர்களா.? அல்லது ஓய்வு எடுக்க போகிறீர்களா.? என கேட்டதற்கு, கண்டிப்பாக நான் ஓய்வு எடுக்க மாட்டேன், தொடர்ந்து நிகழ்ச்சி நடக்கும் என்று கூறியுள்ளார். லாரனின் மனதைரியத்திற்கு கண்டிப்பாக ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்.