பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இந்தியாவின் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்கே லட்சுமணன். இவரது படைப்பான ‛‛தி காமன் மேன்'' மிக பிரபலம். மேலும் அவரது தி காமன் மேன் சிலையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில், அனுபம் கெர் உள்ளிட்ட ‛‛எக்கீஸ் டாப்பான் கி சலாமி'' படக்குழு, செப் 9ம் தேதி, தி காமன் மேன் சிலைக்கு சென்று மரியாதை செலுத்தினர். இதற்கு முக்கிய காரணமே ‛‛எக்கீஸ் டாப்பான் கி சலாமி'' படம் தி காமன் மேன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தான் உருவாக்கிய காமன் மேன் சிலைக்கு மரியாதை செய்ததையும், அதை படமாக்குவதையும் கேள்விப்பட்ட கார்ட்டூனிஸ்ட் ஆர்கே லட்சுமணன், தனது மகள் மூலமாக அனுபம் கெர் மற்றும் படக்குழுவினரை சந்திக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து அனுபம் கெர் உள்ளிட்ட படக்குழுவினர் ஆர்கே லட்சுமணனை சந்தித்து அவரிடம் ஆசி பெற்று கொண்டனர். மேலும் இந்த சந்திப்பின்போது தாங்கள் படமாக்கி வரும் விஷயங்களையும் அவருடன் பகிர்ந்து கொண்டனர், தனது படைப்பை சினிமாவாக எடுத்து வருவதற்கு வாழ்த்து தெரிவித்தார் லட்சுமணன்.