இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
இயக்குனர் வினுபாரதி இயக்கியுள்ள படம் மூச். இரண்டு குழந்தைகளுக்காக ஒரு தாயும், ஆவியும் அடித்துக்கொள்ளும் கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. கதையில்தான் இப்படி தாயும், ஆவியும் அடித்துக்கொள்கிறார்கள் என்றால், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக பஸ்சில் சென்றபோது படப்பிடிப்பு குழுவினரில் இரண்டு பேர் ஹீரோயின் மிஷா கோஷல் பக்கத்தில் நான்தான் உட்காருவேன் என்று அடிதடியில் இறங்கி விட்டார்களாம்.
இதுபற்றி அப்பட டைரக்டர் வினுபாரதி விளக்கமாக கூறினார். அதாவது, குன்னூர் பகுதியில் சில நாட்களாக படப்பிடிப்பு நடத்தி விட்டு, வேறு பகுதியில் படப்பிடிப்பு நடத்த சென்று கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு பஸ்சிலும், இன்னொரு பஸ்சில் ஹீரோயினி உள்பட படக்குழுவினர்களும் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பின்னாடி வந்த பஸ் டிரைவர் எனக்கு போன் போட்டு, சார் பஸ்சுக்குள்ள ரெண்டு பேர் பயங்கரமா அடிச்சிக்கிட்டு உருளுறாங்க. விட்டா பஸ்சோட ஜன்னல் கண்ணாடிய உடைச்சிட்டு வெளியே பாஞ்சிடுவாங்க போலிருக்கு. அதனால் அப்படியே நில்லுங்க. நான் இதோ வந்திடுறேன் என்றாராம். இதனால் பதறிப்போன டைரக்டர் மேட்டுப்பாளையத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு நின்றிருக்கிறார்.
சிறிது நேரத்தில் பின்னாடி வந்த பஸ் அவர்கள் காத்துக்கொண்டிருந்த இடத்தை அடைந்ததாம். அப்போது டைரக்டர் என்ன ஏதென்று ஓடி வந்து விசாரித்திருக்கிறார். அப்போது ஹீரோயின் பக்கத்தில் உட்கார ரெண்டு பேர் அடித்துக்கொண்ட கதையை சொன்னவர், மொத்த பேரையும் பஸ்சில் இருந்து இறக்கி விட்டு விட்டாராம். அதையடுத்து அவரை சமாளித்து மறுபடியும் அனைவரையும பஸ்சுக்குள் ஏற்றி விட்டார்களாம்.
அதோடு, ஹீரோயின் உங்க பஸ்சுல வந்தாதானே இப்படி பிரச்சினை பண்ணுவீங்க என்று சொன்ன டைரக்டர், தான் சென்ற பஸ்சில் அவரை ஏற்றிக்கொண்டு சென்றாராம்.