'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முஸ்லிம் பெயரில் படம் தயாரிச்சு நடிச்ச இசை அமைப்பாளர். அந்த படம் தயாரிப்பில் இருந்தபோது படத்தை இயக்கிய இமய இயக்குனரின் உதவியாளரை ஒரு இயக்குனராக மதிக்கவே இல்லையாம். இவரே ஆல் இன் ஆல் மாதிரி இருந்தாராம். வாய்ப்பு தந்தார்களே என்று எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டாராம் இயக்குனர். இப்போது படம் ஹிட்டானதும். இசையும் அவரது மனைவிகுலமும் ஆளே மாறிட்டாங்களாம். இயக்குனரை தாங்கு தாங்குன்னு தாங்குறாங்களாம்.
அடுத்த படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்கன்னு சொன்னாங்களாம். கணவன் மனைவியை பற்றி தெரிந்து கொண்ட இயக்குனர் பெரிய கும்பிடா போட்டுவிட்டு டாட்டா சொல்லிட்டாராம். யாமிருக்கே பயமேன் என்று தைரியம் சொன்ன குமர தயாரிப்பாளர் அடுத்த படத்தை என் கம்பெனிக்கு பண்ணுங்கன்னு சொல்லி பெரும் தொகை அட்வான்சாக கொடுத்துவிட்டாராம். அந்த அட்வான்ஸ் தொகை, இசை அமைப்பு தன் படத்துக்கு கொடுத்த முழு சம்ளத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாம்.