ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷாருக்கான் தனது படங்களுக்காக அதிகபட்சமான கடின உழைப்புக்களை வெளிப்படுத்துபவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் தற்போது தான் நடித்து வரும் ஃபேன் படத்திற்காக கூடுதல் கடின உழைப்பை அளித்து வருகிறார்.
ஃபேன் படத்திற்காக தினமும் 15 மணி நேரம் ஷீட்டிங்கில் செலவிடுகிறார், ஷாருக்கான். பொதுவாகவே, தினந்தோறும் 20 மணி நேரம் கூட பிஸியாக ஓடிக் கொண்டே இருக்கம் பழக்கம் கொண்டவர் ஷாருக்கான். அந்த வகையில், இது போன்ற பழக்களால் நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் முன் உதாரணமாகவே ஷாருக்கான் இருந்து வருகிறார்.
தனது டுவிட்டர் பகுதியில் இது பற்றி கூறி உள்ள ஷாருக்கான், ஒரு திருப்திகரமான பங்களிப்பையும் நடிப்பையும் தருவதற்காக க்ஷபேன் படத்திற்காக மீண்டும் 15 மணி நேரம் உழைத்து வருகிறேன். இதற்காக டைரக்டர் மனீஷ் மற்றும் ஃபேன் படக் குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
டைரக்டர் மனீஷ் ஷர்மா இயக்கத்தில், யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ஃபேன். இந்த படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வருகிறார். படத்தின் கதைப்படி, நடிகர் ஷாருக்கானின் மிகப் பெரிய ரசிகர் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறாராம்.