விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாம். கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'டாக்கீ போர்ஷன்' என்று சொல்லக் கூடிய அனைத்து வசனக் காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாம். முக்கியமான சில சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் லீ விடேகர் தலைமையில் படமாக்கி வருகிறார்கள். அவையும் சில நாட்களில் முடிந்து விடுமாம்.
அதன் பின் ரஜினிகாந்த், ரவிக்குமார் இருவரும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னைக்கு வர உள்ளதால் படப்பிடிப்புக்கு சிறு இடைவெளி விடுகிறார்களாம். அடுத்து பாடல் காட்சிகளைப் படமாக்க ஐரோப்பா செல்வதுடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுகிறது. இதனிடையே படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறதாம்.
'லிங்கா' படத்தின் மூலம் மீண்டும் அசத்தலான வெற்றியைப் பெற வேண்டும் என்று ரஜினிகாந்த் உட்பட குழுவினர் அனைவரும் இடைவிடாது உழைத்து வருகிறார்கள். 'கோச்சடையான்' படத்தால் ரஜினி ரசிகர்கள் முழு திருப்தியடையாததால் 'எந்திரன்' படத்தை விட இன்னும் பெரிய அளவிற்கு 'லிங்கா' படத்தை வெற்றியடைய வைக்க வேண்டும் என நினைக்கிறார்களாம்.
ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி படம் கண்டிப்பாகத் திரைக்கு வந்துவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.