ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அழகு, திறமை, கவர்ச்சி, நடிப்பு என அனைத்தும் ஒருசேர அமைந்து பாலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் சாஷா அஹா கான். இவர், இப்போது ஒரு அதிரடியான ரோலில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் நிறைய நடிகைகள் சவால் நிறைந்த வேடங்களில் நடித்துள்ளனர். அந்தவகையில் சாஷா, அவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு வலிமையான ரோலில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் புதியபடத்தில் ஆக்ஷ்ன் அவதாரம் எல்லாம் எடுத்துள்ளார். அதிலும் படத்தில் துப்பாக்கி சுடும் காட்சிகள் எல்லாம் உள்ளன. அதனை எல்லாம் சர்வசாதரணமாக நடித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். சாஷாவிற்கு துப்பாக்கி சுட தெரியாது, ஆனால் படத்தில் உடன் நடிக்கும் சுனில் ஷெட்டி, சாஷாவிற்கு உரிய பயிற்சி கொடுத்து அவரை ஆக்ஷ்னில் கலக்க வைத்துள்ளார்.