பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஃபரன் அக்தர், அர்ஜூன் ராம்பால், புரப் கோலி நடிப்பில் வெளியான படம் ராக் ஆன் ஒன். அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியான இந்த படம் 6 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. பாடல்கள், நடிப்பு, கதை என அனைத்து அம்சங்களாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த படம் வெற்றி பெற்றதன் 6ம் ஆண்டு விழாவை இப்படக்குழுவினர் இரண்டு நாட்களுக்கு முன் கொண்டாடினர்.
இந்த வெற்றி கொண்டாட்டம் பற்றிதனது டுவிட்டரி பக்கத்தில் எழுதி உள்ள அபிஷேக் கபூர், ராக் ஆன் ஒன் படம் வெளியிடப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தின் வெற்றி எங்களின் வாழ்க்கையையே மாற்றி அமைத்துள்ளது. இந்த வெற்றிக்கு படத்தின் 3 ஹீரோக்கள் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
ஃபரன் தனது டுவிட்டரில், ராக் ஆன் ஒன் படத்தின் 6ம் ஆண்டு விழாவில் அடியெடுத்து வைக்கும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த படக்குழுவினரும் இது போன்றதொரு வெற்றியை பெற வேண்டும் என்றார்.
அர்ஜூன் தனது டுவிட்டரில் ராக் ஆன் பட ஆண்டுவிழாவிற்கு இனிய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்திற்கு ஷங்கர் மகாதேவன், எக்சான், லோய் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.