ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஷாருக்கான் நடித்து வெளிவர இருக்கும் படம் ஹேப்பி நியூ இயர். இந்த படத்தை உலக முழுவதும் புரோமோட் செய்வதற்காக, அப்படத்தின் டைரக்டர் ஃபரக் கான் தலைமையில் படக்குழுவினர் லண்டன் செல்ல உள்ளனர்.
ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹேப்பி நியூ இயர் படத்தை புரோமோட் செய்வதற்காக ஸ்லாம் என்னும் இசை பயணம் ஒன்றிற்கும் இந்த படக் குழு ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்லம் இசைப் பயணம் செப்டம்பரில் அமெரிக்கா முழுவதும் நடைபெற உள்ளது என ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை தொடர்ந்து அக்டோபரில் லண்டன் முழுவதும் செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இசை பயணத்திற்காக லண்டன் செல்ல ஷாருக்கான் தயாராகி வருகிறார்.
ஷாருக்கான், தீபிகா, அபிஷேக் உள்ளிட்டோர் தவிர பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், மல்லிகா அரோரா கான் போன்றவர்களும் லண்டன் செல்ல உள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.