ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் சுட்டித்தனமான ஹீரோயின் ஆலியா பட். இயக்குநரும், தயாரிப்பாளருமான மகேஷ் பட்டின் மகளான இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இவர் நிறைய ஷாம்பூ நிறுவனங்களின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஷாம்பூ நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம் பாலிவுட்டில் எந்த நடிகர், நடிகையின் முடி சிறந்தது, பார்க்க அழகாக இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆலியா, நடிகைகளை பொறுத்தமட்டில் சோனம் கபூரின் கூந்தல் மிகவும் அழகாக இருக்கிறது, அவரது தலைமுடி நீளமாகவும், பார்க்க மென்மையாகவும் இருக்கிறது, அவர் தனது கூந்தலை சிறப்பாக பராமரிக்கிறார் என்றவர், நடிகரை பொறுத்தமட்டில் ராம்லீலா படத்தில் ரன்வீர் சிங்கின் முடி அழகாக இருந்தது என்றார். மேலும் தனது தந்தையின் தலைமுடி தனக்கு பிடிக்கும் என்றும், பாலிவுட்டின் சிறந்த தலைமுடி உடையவர் என் தந்தை தான் என்று கூறினார்.
ஆலியா பட் நிஜத்திற்கு சொன்னாரா அல்லது கிண்டலுக்கு சொன்னாரா என்று தெரியவில்லை, ஏனென்றால் மகேஷ் பட்டின் தலைமுடி கிட்டத்தட்ட கொட்டி வழுக்கை தலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.