ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், படக்குழுவினர் என ஒட்டுமொத்த பாலிவுட் சினிமா உலகத்தை பற்றி அறிவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏராளமான மனுக்கள் குவிந்து வருகின்றன. இவ்வாறு அளிக்கப்பட்ட மனுக்களில் ஷாருக்கானின் வான்கடே மைதான விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், என்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எனது செருப்பு சைஸ் 9 என்பது உட்பட அனைத்தையும் நான் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். அதுதான் உண்மையும் கூட என்று கூறியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாலிவுட்டிற்கு அனுப்பப்பட்ட மனுக்களில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில இங்கே தரப்பட்டுள்ளன. அவை,
* படங்களில் போலீஸ் ஏன் எப்போதும் தாமதமாகவே வருகிறது?
* ஹீரோவின் துப்பாக்கியில் மட்டும் ஏன் குண்டுகள் காலியாவது இல்லை?
* ஹீரோக்கள் தூக்கி எறியும் பொருட்கள் மட்டும் எப்படி புவிஈர்ப்பு விசை மற்றும் இயற்பியலுக்கு அப்பாற்பட்டு அந்தரத்தில் வெகு நேரம் இருக்கிறது?
* முக்கோண காதல் கதைகளில் ஏன் எப்போதும் இரண்டாவது ஹீரோ அல்லது ஹீரோயின் மட்டும் இறக்கிறார்கள்?
* ஹீரோவும் ஹீரோயினும் டான்ஸ் ஆடப் போவது நடனக்குழுவினருக்கு எப்படி சரியாக தெரியும்?
* சினிமாவில் சில நோய்களுக்கான ஆப்பரேஷனுக்காக மக்கள் பணத்திற்கு கஷ்டப்படுவது போன்று ஏன் காட்டுகிறார்கள்? அவர்களுக்கு ஆயுள் காப்பீடு இப்பது தெரியாதா?
* வில்லன் மட்டும் ஒரே குண்டில் உயிரிழந்து விடுகிறார். ஆனால் ஹீரோ மட்டும் 35 குண்டுகள் உடம்பை துளைத்தாலும் சாகாமல், உணர்ச்சிகரமாக வசனம் பேசுவது எப்படி?
* சல்மான் கான் ஏன் சட்டையில்லாமலே நடிக்கிறார்?.
இது போன்ற பல மனுக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.