விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடித்து வரும் படம் பி.கே. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போஸ்டரில் அமீர்கான் கிட்டத்தட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்தபடி இருந்தார். இப்படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்தன. மேலும் இதுதொடர்பாக அமீர்கான் மற்றும் இயக்குநர் மீது வழக்கு போடப்பட்டது.
இந்நிலையில் பி.கே. படத்தின் மற்றொரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் சர்ச்சைக்குரிய ஸ்டில் எதுவும் இல்லை. இருந்தாலும் பி.கே. படத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும், முதலில் வெளியான நிர்வாண போஸ்டர் நீக்கப்படவில்லை என்றும் கூறி ஹேமந்த் பாட்டீல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து அமீர்கான் கூறுகையில், பொதுவாக ஒரு படத்தின் போஸ்டரில் ஆபாசம், அறுவறுக்கதக்க காட்சிகள், பெண்களை இழிவுப்படுத்தி காட்சிகள், வன்முறை காட்சிகள் போன்றவைகள் உள்ளனவா என்று அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டி சரிபார்த்து பின்னரே ஒப்புதல் அளிக்கின்றனர். அப்படி பி.கே. படத்தின் போஸ்டர், பிலிம் பப்ளிசிட்டி ஸ்கிரீனிங் கமிட்டியால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, அப்படி இருக்கையில் ஒரு படத்தை தடை செய்ய சொல்வது எந்தவகையில் நியாயம் என்று கூறியுள்ளார்.