'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
‛ஒல்லி பெல்லி' இலியானாவில் முதல் இந்தி படம் பர்பி. இப்படம் 2012 செப்டம்பரில் வெளியானது, சூப்பர் ஹிட்டான இப்படம், இலியானாவுக்கும் இந்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் இலியானா, தற்போது சைப் அலிகான் உடன் ஹேப்பி எண்டிங் என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கோவிந்தா, கல்கி, ரன்வீர் சோரி ஆகியோர் நடித்துள்ளனர்.
இன்றைய நவநாகரீக உலகில் வாழும் பெண் மற்றும் ஆண் உடையை வாழ்க்கையை மையமாக வைத்து காமெடியாக இப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது, படத்தை நவம்பர் மாதம் 28-ம் தேதி ரிலீஸ் செய்கின்றனர். நவம்பர் மாதத்தில் தான் இலியானாவின் பிறந்தநாளும் வருகிறது, அந்த மாதத்திலேயே ஹேப்பி எண்டிங் படமும் ரிலீஸ் ஆவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் இலியானா.