வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அபிநயா. அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ம்அறிவு உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் தனி ஒருவன் படத்தில் ஜெயம்ரவியின் முறைப்பெண்ணாக நடிக்கிறார். பூஜை படத்தில் விஷால் தங்கையாக நடிக்கிறார். இது தவிர பிறவி. மேளதாளம் படங்களில் நடித்து வருகிறார்.
அபிநயா இப்போது இந்திக்கும் சென்று விட்டார். அபிதாப்பச்சன், தனுஷ், அக்ஷ்ராஹாசன் நடிக்கும் ஷமிதாப் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். கடந்த வாரம் நடந்த படப்பிடிப்பில தனுஷ் மற்றும் அக்ஷ்ராஹாசனுடன் இணைந்து நடித்தார். அடுத்த வாரம் நடக்க இருக்கும் படப்பிடிப்பில் அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார். ஷமிதாப் படத்திற்கு பிறகு அபிநயாவுக்கு இந்தியில் நல்ல இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த தகவலையும் இந்த செய்தியுடன் சேர்த்துக் கொள்கிறோம். அபிநயா மன்னிக்க வேண்டும். அபிநயா காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. ஷமிதாப் படத்தில் அப்படியொரு கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.