ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷூடன் ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை அமரா தஸ்தர், தன்னுடன் நடிக்கும் தனுசையும் அவரது நடிப்பையும் அனைவரிடமும் பாராட்டி வருகிறார்.
தனுஷ் பற்றி அமரா தஸ்தர் கூறுகையில், டைரக்டர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதையே தனுஷ் செய்கிறார். தனது படம் எப்படி வர வேண்டும் என டைரக்டர் கனவு காண்கிறாரோ அதை தனுஷ் பூர்த்தி செய்கிறார். அவரது வேலை என்ன என்பது அவருக்கு நன்றாக தெரியும். அடுத்தவரின் வேலைகளில் தலையிடவோ, அவரது கருத்தை மற்றவர்களிடம் கொண்டு திணிக்கவோ மாட்டார் என்கிறார்.
படப்பிடிப்பின் போது நட்புடன் பழகும் தனுஷ் தனக்கு நடிப்பில் பல டிப்ஸ் கொடுத்து உதவுவதாகவும் கூறுகிறார் அமரா. தமிழை புரிந்து கொள்வதற்கும் கஷ்டமாக சீன்களை எப்படி செய்ய வேண்டும் என்பதிலும் தனுஷ் தனக்கு உதவுவதாகவும் கூறுகிறார்.
தனுசை ஏகத்துக்கும் புகழ்வதுடன் அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புக்கள் அதிகரிக்கவும் தான் உதவப் போவதாக அமரா கூறி உள்ளார். தற்போது அமரா இந்தியில் இஸாக் படத்திலும், தனுஷ் ரான்ஞ்னா மற்றும் ஷமிதாப் ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றனர்.