பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகி சல்மாலி கோல்கடே. தாரு தேசி... லட் லத் கே... உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ள சல்மாலி, இப்போது 'பாக்கெட் கேங்ஸ்டார்' என்ற படத்திற்காக பாடியிருக்கிறார். லக்கி மற்றும் நவி இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளனர். லக்கி நருலா எழுதிய பாடல் வரிகளை, சில மணிநேரங்களிலேயே பாடி அசத்தி விட்டார் சல்மாலி. இந்தப்பாடல் ஆண் மற்றும் பெண் என இரண்டு பேரின் குரல்களில் பதிவாகியுள்ளது. பெண் குரலுக்கு சல்மாலியும், ஆண் குரலுக்கு நவி சிங்கும் பாடியிருக்கின்றனர். ஹேமந்த் நிலிம் இயக்கி வரும் இந்தப்படம் த்ரில்லர் கதையாக உருவாகி வருகிறது. ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் நடித்த மதுர் மிட்டல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.