ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
இப்போதெல்லாம் படங்களை ஓட வைப்பதற்காக கதையைப்பற்றி யோசிப்பதைவிட, அதற்கு எந்தெந்த மாதிரியான வித்தியாசமான முறையில் பப்ளிசிட்டிகளை முடுக்கி விடலாம் என்பதைத்தான் அனைவருமே ரூம் போட்டு யோசிக்கிறார்கள். அந்த வகையில், இந்தியில் அமீர்கான் நடித்துள்ள பி.கே என்ற படத்தில் எவ்வளவோ காட்சிகள் இருக்க, அதில் அவர் நிர்வாணமாக தோன்றும் காட்சியை வெளியிட்டு பெரும் பரபரப்பு கூட்டினார்கள்.
அதனால் டிசம்பர் மாதம் வெளியாகயிருக்கும் அந்த படம் இப்போதே பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருக்கிறார். அதோடு, படத்தை வாங்குவதற்கும் விநியோகஸ்தர்கள் போட்டி போடத்தொடங்கியிருக்கிறார்களாம். இந்த நிலையில், தற்போது அப்படத்தில் அமீர்கான் தோன்றும் இன்னொரு போஸ்டரையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.
முதல் போஸ்டரில் உடம்பில் ஒரு பொட்டு துணிகூட இல்லாமல் போஸ் கொடுத்திருந்த அமீர்கான், இந்த போஸ்டரில் அதற்கு நேர்மாறாக, உடம்பு முழுக்க கவர் பண்ணும் பாண்ட்வாலா உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதனால் இதுவரை அவரது நிர்வாண போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சில அமைப்புகள் இப்போது வாயடைத்து நிற்கிறதாம்.