பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோ சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர், சல்மான் கான் உடன் தபாங், தபாங்-2 என தொடர்ந்து இரண்டு முறை ஜோடி சேர்ந்தார். இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக, பாலிவுட்டின் ராசியான ஜோடி என்ற பெயரை இருவரும் பெற்றனர். இந்நிலையில் சல்மான் கான், இப்போது சூரஜ் பர்ஜத்தையா இயக்கும், 'பிரேம் ரத்தன் தான் பயோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சல்மான் ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹாவை தான் நடிக்க வைக்க எண்ணினாராம் இயக்குநர். ஆனால் ஹீரோ சல்மான்கானோ, தொடர்ந்து ஒரே நடிகையுடன் நடிப்பது நன்றாக இருக்காது, அதனால் புதிதாக ஒரு ஹீரோயினை தேர்வு செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம். இதனால் தான் சோனாக்ஷிக்கு பதிலாக சோனம் கபூரை தேர்வு செய்தாராம் இயக்குநர்.