பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு பக்கம் சூர்யா நடித்து வெளிவந்துள்ள 'அஞ்சான்' படத்தைப் பற்றி அச்சப்படும் விதத்தில் விமர்சனங்கள், கருத்துக்கள் வெளிவந்தாலும், சூர்யா நடித்த 'சிங்கம் 2' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படத்தின் முதல் நாள் வசூல் அள்ளுகிறதாம். முதல் நாள் வசூல் மட்டுமே 32 கோடி ரூபாய் இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014ல் இதுவரை வந்த படங்களிலேயே முதல் நாள் வசூலில் இந்தப் படம்தான் அதிகத் தொகையை வசூலித்துள்ளதாம்.
அஜய் தேவகன் நடித்து 2011ல் வெளிவந்த 'சிங்கம்' படத்தின் வசூலை விடவும், அவர் நடித்த முந்தைய படங்களின் வசூலையும் இந்த 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' முறியடித்துவிட்டதாம். சமீப காலத்தில் ஹிந்தியில் வெளியாகும் பெரிய ஹீரோக்களின் படங்கள் முதல் நாள் வசூலில் மட்டுமல்லாது தொடர்ந்து வசூலித்து 100 கோடி ரூபாயைத் தாண்டி வருவது குறிப்பிடத்தக்கது.
அக்ஷய் குமார் நடித்த 'ஹாலிடே', சல்மான் கான் நடித்த 'கிக்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜய் தேவகன் நடித்துள்ள இந்த 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படமும் 100 கோடி ரூபாய் வசூலை விரைவிலேயே தொட்டுவிடும் என்கிறார்கள்.