டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். எப்பவுமே கலகலப்பாக இருக்கும் ஷாரூக், விழாக்களுக்கு சென்றாலும் அதை அப்படியே தொடர்வார். மேலும் விழா மேடையில் தான் ஏறி நடனமாடி உடன் இருப்பவர்களையும் ஆட வைத்து விடுவார், அந்தளவுக்கு ஜாலியான மனிதர் ஷாரூக். இந்நிலையில் மேற்கு மாநிலம், கோல்கட்டாவில் நடந்த போலீஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ஷாரூக் பங்கேற்றார். விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.
விழாவில், கலை நிகழ்ச்சியில் வழக்கம் போல் தனது பாணியில் ஆடிய ஷாரூக், திடீரென பாதுகாப்புக்காக நின்றிருந்த பெண் போலீஸ் ஒருவரை அப்படியே தூக்கி நடனமாடினார். கூடவே அந்த பெண் போலீஸூம், ஷாரூக்குடன் நடனமாடினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை உண்டாக்கியுள்ளது. பணியில் இருக்கும், அதுவும் போலீஸ் உடையில் இருக்கும்போது இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதால், இது போலீஸ் உடையை அவமதிக்கும் செயல் என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.