'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில், தீபிகா படுகோனேவும் ஒருவர். இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டடித்து வருவதால், படத்திற்கு படம், அவரின் சம்பளம் எகிறிக் கொண்டே செல்கிறது. தீபிகா, இதுவரை, 22 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் மொத்த வசூல், 4,000 கோடி ரூபாயை தாண்டி விட்டதாம். இந்த பட்டியல் வெளியானதில் இருந்து, மகிழ்ச்சியில் உள்ளாராம் தீபிகா. மேலும், கடந்த மாதம், இந்தியாவின் கவர்ச்சி பெண்களுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், முதல் இடத்தை பிடித்த தீபிகா, அதை தனக்கு கிடைத்த கவுரவமாக கருதியவர், இப்போது, இந்த, 4,000 கோடி ரூபாய் வசூல் சாதனையையும், இன்னொரு கவுரவமாக நினைக்கிறாராம். இதையடுத்து, பாலிவுட்டில் உள்ள தீபிகாவின் போட்டி நடிகைகளின் காதுகளில் இருந்து புகை வரத் துவங்கியுள்ளது.