ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய தேதியில் இந்தியில் வசூல்ராணி தீபிகா படுகோனே தான். அவர் சினிமாவில் அறிமுகமாகி 7 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த 7 வருடங்களில் அவர் நடித்திருப்பது 17 படங்களில். இந்த படங்கள் மூலமாக அவர் 4 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறார். 2013ம் ஆண்டு ஹாட்ரிக் வெற்றி கொடுத்து 100 கோடி கிளப்பிலும் இணைந்தார்.
இது தவிர அதிகப்படியான நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருப்பவரும் தீபிகாதான். தற்போது அவர் 17 நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருக்கிறார். பாலிவுட் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குகிறவரும், விளம்பரத்தில் அதிகம் சம்பாதிப்பவரும் தீபிகாதான். சினிமா, மற்றும் விளம்பரங்கள் மூலம் இதுவரை 200 கோடி வரை சம்பாதித்திருப்பதாக புள்ள விபரங்கள் தெரிவிக்கிறது.