Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரேகா போல் என்னால் நடிக்க முடியாது...சோனம் கபூர்

22 ஜூலை, 2014 - 17:11 IST
எழுத்தின் அளவு:

ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் அசோக்குமார், ராகேஷ் ரோஷன், ரேகா நடித்து 1980ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப் படமான 'கூப்சூரத்' படம் அதே பெயரில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஷஷாங்கா கோஷ் இயக்கத்தில் ஃபவத் அப்சல் கான், 'ராஞ்சனா' புகழ் சோனம் கபூர் நடிக்கத் தயாராகி வருகிறது. பழைய 'கூப்சூரத்' படத்தில் ரேகாவின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாகப் பேசப்பட்டது. ஆனால், அவரைப் போல் அந்த கதாபாத்திரத்தில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியாது என புதிய 'கூப்சூரத்'தில் ரேகா கதாபாத்திரத்தில் நடிக்கும் சோனம் கபூர் மனம் திறந்து பேசியுள்ளார்.


“என்னைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்கள்தான் முழுவதுமாக ரசிக்க வைக்கும் படங்களாக அமையும். ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற ஒரு சிலர்தான் அப்படிப்பட்ட படங்களைக் கொடுத்தனர். அவரது படைப்பில் உருவான 'குட்டி, மில்லி, கூப்சூரத்' படங்கள் அப்படி ஒரு உணர்வைத் தந்த படங்கள். அவருடைய படங்களில் ஒரு கருத்து இருக்கும், அதே சமயம் மிகவும் ஜாலியான படங்களாகவும் இருக்கும். அவர் படங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். இந்த படத்தில் ரேகா அளவிற்கு என்னால் நடிக்க முடியாது,” என்றும் கூறியிருக்கிறார்.


இந்த படம் மூலம் பாகிஸ்தான் நடிகரான ஃபவத் அப்சல் கான் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வர உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in