ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி, தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதித்யா சோப்ராவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இத்தாலியில் மிகவும் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. பாலிவுட்டில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராணி முகர்ஜி. ஷாரூக்கான், அமீர்கான் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். தற்போது 36 வயதாகும் ராணி முகர்ஜிக்கும், பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதித்யா சோப்ராவுக்கும் நீண்டகாலமாகவே காதல் இருந்து வருகிறது. ஆனால் இதனை இருவருமே மறுத்து வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இத்தாலியில், மிகவும் எளிமையாகவும், ரகசியமாகவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இத்தகவலை பிரபல சினிமா வர்த்தக வல்லுநர் தரண் ஆதார்ஷ் தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார்.
ஆதித்யா சோப்ரா பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான யாஷ் சோப்ராவின் மகன் ஆவர். ஆதித்யா சோப்ரா, ஏற்கனவே பாயல் கண்ணா என்பவருடன் திருமணமாகி விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.