'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அமிதாப் பச்சன் நடித்துள்ள புதிய படம் பூத்நாத் ரிட்டர்ன்ஸ். இது 2008ம் ஆண்டு வெளியான பூத்நாத் படத்தின் இரண்டாம் பாகம். அமிதாப் பச்சன், பொம்மன் இரானி, அனுராக் காஷ்யப், உஷா ஜதேவ், சஞ்சய் மன்ஞ்சரா நடித்திருக்கிறார்கள். நிதீஷ் திவானி இயக்கி உள்ளார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பேய் பழிவாங்கும் காமெடிக் கதை. இரண்டாம் பாகத்தில் தேர்தல் பற்றிய காட்சிகள் நிறைய இடம்பெறுகிறதாம். அதனால் படம் முன்பே முடிந்துவிட்டாலும் தேர்தல் சீசனுக்காக காத்திருந்து நாளை (ஏப்ரல் 11) வெளியிடுகிறார்கள்.
இதுபற்றி அமிதாப் கூறியிருப்பதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாச்சு. ஆனால் அப்போ இது தேர்தல் நேரத்தில்தான் ரிலீசாகும் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் இது பொருத்தமான நேரம்தான். இந்தப் படத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை சீரியசாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் அமிதாப்.