Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

லவ் இஸ் ஆல் யூ நீட் - கோவா பட ஸ்பெஷல்

06 மார், 2014 - 14:38 IST
எழுத்தின் அளவு:

பல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்து உலகப்புகழ்பெற்ற பியர்ஸ் பிராஸ்னென், ரொமான்டிக் மற்றும் காமெடி களத்தில் கலக்கி வெளிவந்திருக்கும் படம் தான் ''லவ் இஸ் ஆல் யூ நீட்''. ஆஸ்கர் விருதுபெற்றுள்ள டென்மார்க்கை சேர்ந்த உலகப்புகழ்பெற்ற பெண் இயக்குனர் சீசன் பியரின் இயக்கத்தில் மனதில் நிற்கும் படமாக வெளிவந்துள்ளது. நினைத்துக்கூட பார்க்க முடியாத பல விஷயங்கள் வாழ்க்கையில் அதிசயமாக நடக்கக்கூடும் என்பதை இப்படம் காட்டுகிறது. இப்படத்தில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், பியர்ஸ் பிராஸ்னன் தவிர மற்ற எல்லா நடிகர்களும் இத்தாலி மற்றும் டேனீஷ் மொழிகளில் பேசுகிறார்கள். பிராஸ்னன் மட்டும் ஆங்கிலத்தில் பேசுகிறார்.

ஐடா ஒரு ஹேர்-டிரஸ்ஸர். புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை முடித்து குணமடைந்திருப்பவர். அவர் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வரும்போது வேறு ஒரு இளம் பெண்ணுடன் தனது கணவர் உல்லாசமாக இருப்பதை பார்த்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

ஐடாவின் மகள், தான் காதலிக்கும் இளைஞரை இத்தாலியில் ஒரு கிராமப்புறத்தில் இருக்கும் பெரிய வீட்டில் திருமணம் செய்ய இருக்கிறார். வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு இத்தாலிக்கு செல்ல ஏர்போர்ட்டுக்கு செல்லுகிறார். அங்கு கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் தனக்கு இருக்கும் மன குழப்பத்தில் பியர்ஸ் பிராஸ்னென் காரில் மோதிவிடுகிறார். அதை அடுத்து இவருக்கும் தகராறு ஏற்படுகிறது. தன் மகளின் திருமணத்திற்காக குறிப்பிட்ட ஊருக்கு செல்வதாக ஐடா சொல்லும்போது தான் பிராஸ்னெனுக்கு புரிகிறது. அவருடைய மகனுக்கும் இத்தாலியில் திருமணம்; ஐடா தான் மணகளின் தாய் என்று தெரிந்து கொள்கிறார். மோதலில் ஆரம்பித்து நட்பாக மாறுகிறது. மெல்லிய நகைச்சுவை.

நட்பும், சுற்றமும் அங்கு கூடுகிறது. திருமணத்திற்கு முன்பு விருந்து நடக்கிறது. மணமகள் - மணமகன் இருவரிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு திருமணம் நின்று போய்விடுகிறது. சமாதான முயற்சிகள் பயனளிப்பதில்லை. அனைவரும் தங்கள் சொந்த இடத்திற்கு திரும்புகின்றனர். ஐடாவும்-பிராஸ்னனும் பழக ஆரம்பிக்கிறார்கள் ஐடாவின் சலூனுக்கு பிராஸ்னன் முடிதிருத்திக் கொள்ள வருகிறார். இருவரும் வாக்கிங் சென்று அமர்ந்து பேசும் போது ஐடா ஆஸ்பத்திரியிலிருந்து தனக்கு வந்திருக்கும் கடிதத்தை பிராஸ்னனிடம் காண்பிக்கிறார். ஐடாவிற்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டதை அறிவிக்கும் கடிதம் தான் அது. பிராஸ்னன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐடாவை கேட்கிறார். ஐடாவும் சம்மதிக்கிறாள். அத்துடன் படம் முடிகிறது.

பெரிய அளவில் ஆரஞ்சு தோட்டங்களை நடத்தி, ஆரஞ்சு பழங்களை பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற எப்போதும் பறந்து கொண்டிருக்கிற விவசாயி தொழிலதிபராக பிராஸ்னென் நடித்திருக்கிறார். ஆரஞ்சு பயிரை எப்படி வளர்க்க வேண்டும், எதெல்லாம் செய்யலாம், எதெல்லாம் செய்யக்கூடாது, பழங்களின் விளைச்சலை எப்படி பெருக்குவது என்றெல்லாம் சர்வதேச விவசாய விஞ்ஞானி போல தகவல்களை அள்ளிக் கொடுப்பது, பிராஸ்னென்னும் அவரது மகனும் மனம் விட்டு பேசுவது, ஐடாவிற்கும், பிராஸ்னெனுக்கும் அன்பு மலர்வது என்று பல ரசிக்கக்கூடிய காட்சிகள் படத்தில் நம்மை ஈர்க்கின்றன.

இந்த ரொமான்டிக் காமெடியில் ஐடாவாக பிரபல நடிகை டிரைன் டைர்ஹோம் நல்ல சாய்ஸ், மனதில் நிற்கும் கேரக்டர். வாழ்க்கையில் நினைக்காததெல்லாம் கூட நடக்கும் என்பதை லவ் இஸ் ஆல் யூ நீடு படம் அருமையாக காட்டுகிறது.

ரொமான்ஸ், காமெடி என இரண்டிலும் பாண்ட் நடிகர் வெற்றிக்கொடி நாட்டுகிறார்.

- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in