டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா. இவரது மகள் சோனாக்ஷி சின்ஹா. தபாங் என்ற ஒரு படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்றவர். அக்ஷய் குமாரின் ஆஸ்தான நாயகி. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தமிழ் துப்பாக்கியின் ரீமேக்கான ஹாலிடேவில் காஜல் அகர்வால் கேரக்டரில் நடிக்கிறார் சோனாக்ஷி. தமிழ் துப்பாக்கி படத்தை பார்த்த சோனாக்ஷி, "அவர் (காஜல்) குத்துச்சண்டை போடுவது போல நன்றாக நடித்திருக்கிறார். நான் நிஜமாகவே போடுகிறேன்" என்று கமெண்ட் அடித்ததுடன் இரண்டு மாதங்கள் தீவிர உடற்பயற்சி, குத்துச் சண்டை பயிற்சி பெற்று நடித்திருக்கிறார். இந்த காட்சிகள் படப்பிடிப்பின் போது உடன் நடித்த மூன்று பெண்கள் காயமடைந்தும், மயக்கமடைந்த செய்தியும் இப்போது வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து சோனாக்ஷி கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையே எனக்கு கிடையாது. காரணம் நான் ரொம்ப குண்டாயிருப்பேன். அப்பாவை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வரும் அக்ஷய்குமார்தான் நீ ரொம்ப அழகா இருக்க உடம்பை மட்டும் சிலிம்மாக்கிட்டீன்னா பெரிய ஸ்டாரா வருவேன்னு ஆசையை தூண்டினார். அதன்பிறகு ஜிம்மே கதியாக கிடந்து இளைத்தேன். ஜிம் எனக்கு பழகிப்போனதால் என் கேரக்டருக்கு நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி என்னை தயார் செய்து விடுவேன். ஹாலிடே படத்தில் ஹீரோயின் பாக்சிங் வீராங்கணை என்றார்கள். உடனே பாக்சிங்கின் அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டு நடித்தேன் என்கிறார் சோனாக்ஷி