இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகிஸ்தானின் கவர்ச்சி நடிகை வீணா மாலிக். மாடலிங்காக வாழ்க்கையை துவக்கிய வீணா இந்திப் படங்களில் படு கவர்ச்சியாக நடித்தார். இதனால் பாகிஸ்தானின் பழமைவாதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளானார். அதையெல்லாம் மீறி நடித்துக் கொண்டிருந்தார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கன்னடத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் சில்க்காக நடித்தார். கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் தொழில் அதிபர் ஆஷாத் பஷீர் கானை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் வீணா மாலிக் ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கிவிட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. தன் கணவர் ஆஷாத்துடன் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருக்கிறார். முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மெக்காவிற்கு சென்று வழிபட்டார். பின்னர் அரேபியாவில உள்ள முக்கிய இடங்களுக்கு சென்று விட்டு திரும்பியிருக்கிறார்.