இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
தென்னிந்திய சினிமாவில், திருமணத்திற்கு பின், நடிகைகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆனால், பாலிவுட்டில், இந்த பிரச்னையெல்லாம் இல்லை. திருமணமானாலும், வழக்கம்போல், முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடுவர்.அந்த வரிசையில் கரீனா கபூரும் இடம் பிடித்துள்ளார். 2012ல், சயீப் அலிகானை திருமணம் செய்த கரீனா, தொடர்ந்து, முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அவர், கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட்டில் பரபரப்பு செய்தி வெளியாகிஉள்ளது. அவரை வைத்து படம் தயாரித்து வரும் நிறுவனங்கள் அதிர்ச்சிடைந்துள்ளன.
இதையடுத்து, இதுபற்றி விளக்கம் அளித்துள்ள அவர், நான், கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தி உண்மைஇல்லை. சிங்கம் - ௨ இந்தி படத்திற்காக என் உடம்பை கட்டுகோப்பாக மாற்றியுள்ளேன். அந்த மாற்றத்தைக் கண்டு தான், இப்படி தவறாக செய்தி பரவியுள்ளது. இப்போதைக்கு, எனக்கு தாயாகும் ஆசையில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பின், குழந்தை பெற்றுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார் கரீனா கபூர்.